நீ எதிர்ப்பட்ட அநாதிக்காலத்தின்
ஏதோ ஒரு நொடி
ஆனந்த வெளியாக
ஒளி ததும்பி நிற்கிறது நினைவில் !!!
எங்காவது
எப்போதாவது
வழிகள் கலந்து பிரிகின்றன உறவுகள்
இனி
காற்றில் ஆறும் காயங்கள்
வடுவாக எஞ்சும் உன் பெயர்
இவ்வளவும் ஏன்,
இன்னும் நான் நேசிக்கும் முதல்பெண் நீ