---------------------------------------------------------------------------------
இதுதான் உங்க 'ட்க்'கானு கேட்கறது காதில விழுது. :-)
என்ன செய்ய? ஒரு இசை நமக்கு பிடிக்குமா? பிடிக்காதா? என்று தெரியவே இவ்வளவு நாள் தேவைபடுகிறது.இது சைகாலஜிகல் துறை சம்பந்தபட்டவர்கள் இதை ஆராயலாம்.
முதன் முறை கேட்கும் போது எந்த பாடலுக்கும் வித்தியாசம் தெரியாமல், ஒரு உயிரே இல்லாமல் இருந்தது அல்லது 'இருந்தது போல்' இருந்தது. ( இந்த வாக்கியம் சரியா? ;-)) ஆனால், அதை எழுத பயம்.. ஏனென்றால் பல தடவை நான் இப்படி ஏமாந்திருக்கிறேன்.
A.R. ரஹ்மான் இசையை கேட்க கேட்க அது தரும் அனுபவம் முற்றிலும் வேறானது. பின்ன... முதலில் கேட்கும் போது கேட்க பிடிக்காதது, பிறகு மிக பிடித்த பாடல் வரிசையில் சேர்ந்து விடுகிறது.
பதிவுலகில்,எந்திரன் இசை விமர்சனங்களை படிக்கும் போது இது தெளிவாக தெரியும்.யாருமே 100% சூப்பர் என எழுதுவதில்லை..
எந்திரனில் எனக்கு பிடித்தது ( இப்போதைக்கு :-) ) -
1. இரும்பிலே ஓர் இருதயம்... ( அந்த 'காந்த' பெண் குரல்- Amazing!!!!! )
2. கிளிமாஞ்சாரோ...
பி.கு:
ஆனால் ஒன்று தெளிவு. இதில் எந்த பாடலையும் யாரும் பாடி இன்புற இயலாது. கேட்க மட்டுமே முடியும். கனிப்பொறி மொழியில் சொன்னால் - Read only. No Write Access :-)
No comments:
Post a Comment