Saturday, September 11, 2010

திருடி அகபட்டவனின் முகம்

ரோட்டில் நடந்து சென்று கொண்டு இருந்தேன். திடீரென ஒரு சலசலப்பு. கூட்டம். கூட்டத்தின் நடுவே அவன்.


நிறைய அறை விழுத்திருக்க வேண்டும்.
முகம் முழுக்க தடிப்புகள்.
கண்ணில் நீர். நிறைய அழுதிருந்தான். அழுது கொண்டிருந்தான்.
மாண்டி கொண்ட பதட்டம்.
எல்லாவற்றையும் தாண்டி இனி என்ன ஆகுமோ என்ற மரண பயம் அவன் முகத்தில் தெரித்தது.

எனக்கு அவனுடைய முகத்தை பார்த்த போது ஒரு சிறிய நடுக்கம்தான் ஏற்பட்டது. அகத்தின் அழகு முகத்தில் என்பார்.அழகு மட்டுமல்ல. அகத்தின் அவலமும் முகத்தில்தான்.

பிக்பாக்கெட் ஆக இருக்க வேண்டும். தவறு அவன் பக்கம்தான். திருடன். தண்டனைக்கு உரியவன்.

ஆனாலும் அவன் முகத்தில் தெரிந்த அந்த மரன பயம், அவன் மேல் பரிவை தந்தது.

ஒரு திருடன் மேல் என்ன பரிவு எங்கிறீர்களா?

அவனுக்கு மீறி போனால், 16 அல்லது 17 வயது தான் இருக்கும்.அவன் உடலில் வாங்கிய வலி நாளை மறைந்து விடும்.
ஆனால் அகம் கண்டிப்பாக கடுமையாக காயம் பட்டிருக்கும்.

அவனை அடிப்பதில்தான் அவர்களுக்கு என்னே சுகம்... கிடைத்து விட்டான் ஒருவன் நம் வீரத்தை காட்ட,,,,

ஒரு நாய் இதைவிட நல்ல மரியாதையை பெறும்.

நான் அவன் செய்ததை நியாய படுத்தவில்லை. ஆனால் அவன் அழுகை நிஜம். அதற்க்கு பின்னால் என்ன கதையோ?

2 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

தவறுகள் தண்டிக்கப்பட வேண்டியவை தான்... அது அடியாக தான் இருக்க வேண்டுமென்றில்லை... அன்பென்ற ஆய்தத்தால் கூட செய்யலாம்..

தனி காட்டு ராஜா said...

யார் இது வரை ஒரு தவறு கூட செய்யவில்லையோ ....அவர்கள் மட்டும் கல்லெரியுங்கள் என்று இயேசு சொன்னது தான் ஞாபகத்திர்கு வருகிறது ....

Post a Comment