*********************************************************************
இன்னும் நீங்காத பிரமிப்புடன் இதை எழுதி கொண்டிருக்கிறேன்.
ஒரு புத்தகத்தை இப்படி என்னை மறந்து, காலம் பற்றி நினைவின்றி,
பித்து பிடித்தது போல் .. படித்தது இதுதான் முதல்முறை.
சோழர் குல தோன்றல்களையும்,சோழ வள நாட்டை பற்றியும் படித்தேன்என்பதை விட, 'பொன்னின் செல்வன்' என்ற கால எந்திரத்தின் மூலம் பயனித்து,,, அவர்களோடு வாழ்ந்தேன் என்று தான் கூற வேண்டும். இது ஒரு அற்புத அனுபவம்.
பல பேர் சொல்லியும், ஆங்காங்கே இப்புத்தகத்தை பற்றி படித்தும்.. வாங்கி படிக்க வேண்டும் என்று ரொம்ப நாட்க்களாக நினைத்து கொண்டிருந்தேன்.
போனமுறை ஈரோடு புத்தக கண்காட்சியில், மலிவு விலையில் வாங்கியும் ஆயிற்று.ஆனால் ஒரு தயக்கம் இருந்தது. இது 50 வருடங்களுக்கு முன்னால் எழுத பட்டது. எனவே அந்த மொழிநடை படிக்க கொஞ்சம் சவாலாக இருக்குமோ என்று.,
ம்ம்ஹும்...அதெல்லாம் முதல் அத்தியாயத்தை படிக்கும் முன்...
ஆடி பெருக்கு அன்று,
முன்மாலை பொழுது,
அடர்ந்த மரங்கள்
வீரநாராயண ஏரி நிரம்பி வழிய..
சோழ நாட்டு பெண்கள் பாட்டு பாடி அதை கொண்டாடி கொண்டிருக்க..
அங்கு வரும் வல்லத்து இளவரசன், வாணர் குல வீரன் வந்திய தேவனின் அறிமுகத்தோடு தொடங்குகிறது 'பொன்னியின் செல்வன்'.
ம்ம்ம்.. சீட் பெல்ட் போட்டு கொள்ளுங்கள். 1000 வருடங்கள் பின்னொக்கி பயனிப்போம்.
சோழர்களின் வீரத்தை
அவர்களின் உயந்த வாழ்கை நெறிமுறையை
அவர்களின் இராஜ்ஜியதை,
அவர்களின் திறமையை
அவர்களின் காதலை
எல்லாவற்றிக்கும் மேலாக 'அவர்களின் தியாக மணபான்மையை'
அவர்களோடு அவர்களாக பயணித்து தெரிந்து கொள்வோம்.
முதலில் 'பொன்னியின் செல்வன்' படைத்த ஆசிரியர் பற்றி கொஞ்சம்......
பொன்னியின் செல்வன் படித்தவுடன் எனக்கு தோன்றியது இதுதான்,,,
'இந்த மாதிரி ஒரு புத்தகத்தை எழுத சாதாரண அறிவு படைத்தவர்களால் முடியாது. ஏன் அறிவில் மேன்பட்டவர்கள் கூட எழுதிவிட முடியாது.. இதை எழுத கூரிய அறிவுடன், தெய்வ அனுகிரகமும் வேண்டும். அது இதை எழுதிய திரு.கல்கி அவர்களுக்கு வாய்த்திருகிறது.'
ஒரு நான்கு நாட்கள், சோழர்களொடு சோழர்களாக வாழ்ந்த அனுபவத்தை தந்த திரு.கல்கி அவர்களுக்கு .. பல கோடி நன்றிகள்..
பொன்னியின் செல்வன்...
எத்தனை கதை மாந்தர்கள்.... ஏத்தனை சம்பவங்கள்....
இதன் வெற்றியே.. கதை மாந்தர்களை வடிவமைத்ததில் தான் இருக்கிறது.
படிப்பது பெண்ணாக இருந்தால் .. அவர்கள் பொன்னியின் செல்வன் மீதோ.. வாணர் குல வீரன் வந்திய தேவன் மீதோ காதல் கொள்வார்கள்.
படிப்பது ஆணாக இருந்தால்.. சோழர் குலவிளக்கு, குந்தவை பிராட்டியை தேடி அலைவார்கள்....
ஆற்றல் படைத்த ஓற்றன், வீர வைஷணவன் ஆழ்வார்கடியான்,
பாண்டிய நாட்டு ஆபத்துதவிகள்.
தளபதி பழுவேட்டையர்கள்,
வீரர்கள் கந்தன்மாறன், சம்புவரையர்கள்,மலையமான்
தைரிய பூங்குழலி.....
பூவினும் மெல்லிய வானதி
அழகிய விஷம் நந்தினி,...
அன்பின் அன்னை 'ஊமை தாய்'
கதை நாயகன் வாணர் குல வீரன் வந்திய தேவன்
கம்பீர அழகும் அறிவும் கொண்ட இளைய பிராட்டி குந்தவைதேவி
எல்லாருக்கும் மேல்- பொன்னின் செல்வர் - அருள்மொழி வர்மர்...
இன்னும் எத்தனை....
நிறைய உப நதிகள் வந்து கலந்தாலும், பொன்னியின் செல்வனின் மைய ஓட்டம் சோழ இராஜ்ஜியத்தை பற்றியது.
ஒரு இராஜ்ஜியதை ஏற்படுத்த, அதை கட்டி காக்க... எண்ண எண்ண.. செய்ய வேண்டி இருக்கிறது !!!!
இக்கதையில் யாருமே தீயவர்கள் கிடையாது. இங்கு சூழ்நிலைகள் தான் தீயது. ஒரு குழப்ப சூழ்நிலையில் அல்லது மோசமான சூழ்நிலையில்
ஒரு ராஜ்ஜியத்தை காக்க நடக்கும் போராட்டமே பொன்னியின் செல்வன்.
கதை முழுக்க அன்பே பிரதானம். தாய்பாசம், தந்தைபாசம், சகோதர பாசம்,காதல், நட்பு, விசுவாசம்,வீரம், குடிமக்கள் பாசம்... என அன்பால் பின்னபட்ட ராஜராஜ சோழனின், சோழ சாம்ராஜ்ஜிய கதையே 'பொன்னியின் செல்வன்...'
கதையில் வரும் வர்ணனைகள், சோழ பேரரசு இன்று இல்லையே.. சோழர் குல தோன்றல்கள் நம்மோடு வாழவில்லையே!!! என ஏக்கம் கொள்ள வைக்கும்...
இதை படித்தவுடன், ஒரு பெருமித உணர்வு பொங்கி வழிந்தது... ஆம் 1000 வருடங்களுக்கு முன் சோழர்கள் ஓர் உயர்தர வாழ்கை முறை வாழ்ந்து இருக்கிறார்கள். அவர்களின் நேர்மை, பண்பு வியக்க வைக்கிறது.
பொன்னியின் செல்வன் கதை முடிவு பற்றி ஒரு சலசலப்பு உண்டு.. ஆனால் அதற்கு ஆசிரியர் தரும் விளக்கம் ஆக சிறப்பானது.
(எனது கண்ணிப்பின் படி வந்தியத்தேவன், குந்தவை பிராட்டியின் காதலை ஆசிரியர் எடுத்துரைத்த விதமே.. வாசகர்களை வேறு ஒரு முடிவை நோக்கி எதிர்பாக்க வைத்திருக்கும்... ஏனென்றால்.. அந்த காதலை அவ்வளவு வீர்யமாக ஆசிரியர் வடிவமைத்திருப்பார். )
குந்தவை- வந்திய தேவன் காதல்
பூங்குழலியின் தைரியம், காதல்
நந்தினியின் வசிகரிப்பு...
வந்திய தேவனின் சாகஸங்கள்..
ஆழ்வார்கடியானின் ஓற்று அறியும் திறமை..
வந்திய தேவன் - ஆருள்மொழி வர்மர் நட்பு....
பொன்னியின் செல்வரின் ஓளி...
இப்படி எத்தனயோ கவர்ந்த விஷயங்கள் இருந்த போதிலும்... என்னை மிக பாதித்த, கவர்ந்த பாத்திர படைப்பு,, - ஊமை தாய்.. அந்த அளவுகடந்த, அபரிதமான, பொங்கி வழியும் அன்பு.., நம்மை உளவியல் ரீதியாக மாற்ற வல்லது....
ஆனால் இப்புத்தகதை படிக்க சொல்லி பரிந்துரைக்க போவதில்லை..(உங்களில் பலர் முன்பே படித்திருக்களாம்.. ( நான் எப்பவுமே கொஞ்சம் லேட்...) )
ஆனால் ஒன்று மட்டும் உறுதியாக சொல்ல முடியும்... இதை படிக்காமல் போனால்.. வாழ்வின் ஓர் சந்தொசத்தை, ஓர் அற்புத அனுபவத்தை இழக்கீறீர்கள் என்று அர்த்தம்.
முன்பே படித்த வாசகர்கள், தங்கள் வாசிப்பனுபவத்தை பிண்ணூட்டத்தில் பகிரலாம்..
9 comments:
பல முறை படித்து விட்டேன். இனிமேலும் படிப்பேன். படிக்கச் படிக்கச் தெவிட்டாத ஒரு நாவல் அது... எதை சொல்ல எதை விட.. பள்ளி நாட்களில் படித்து பின் குந்தவியின் மேல் காதலாய் திரிந்தேன். வேளையில் சேர்ந்தப்பின் இணையத்தில் மீண்டும் மீண்டும் படித்துக் கொண்டே இருக்கிறேன்
வருகைக்கு நண்றி நண்பரே... :-
அமரர் சாண்டில்யன் அவர்களின் கடற்புறா,யவனராணி
போன்ற சரித்திர நாவல்களையும், வில்லிபாரதம் உரைநடையிலும் படித்து பாருங்கள் you can taste the Heroism
// அமரர் சாண்டில்யன் அவர்களின் கடற்புறா,யவனராணி
போன்ற சரித்திர நாவல்களையும், வில்லிபாரதம் உரைநடையிலும் படித்து பாருங்கள் you can taste the Heroism //
கேள்வி பட்டிருக்கிறேன்... கண்டிப்பாக படிக்க வேண்டும்... நண்றி தங்கள் பரிந்துரைக்கு,,, :-)
கனகு.. குட்.. நிறைய படி..வாழ்த்துகள்.
// Cable Sankar said...
கனகு.. குட்.. நிறைய படி..வாழ்த்துகள்//
அண்ணா.. What a Co-incident... என்னோட பதிவை Post பன்னிட்டு..
இப்பவரை உங்கள் blog படிச்சிடு இருந்தேன்.
இங்க வந்து பார்த்த உங்க பிண்ணூட்டம்... Very surprise
உங்க உக்கத்திற்க்கு ரொம்ப நண்றி...
கனகு
உன் பதிவுகளில் இது தான் உருபடியான ஒன்று. இது மாதிரியான பயனுள்ளவைகளை பதிவு செய், மொக்கைகளை தகர்த்து எரி.
சத்தி
அன்பு நண்பனுக்கு,
உன்னக்கு இன்னு திருமணம் ஆகவில்லை, எனவே நீ சாண்டலியன் "கடல் புறா", "யுவன ராணி " படிக்கலாம். உனது மேலாண்மை திறனை வளர்த்துக்கொள்ள "ராஜா முத்திரை " படிக்கலாம். பிறகு உன் கருத்தை என்னினடம் பகிரிந்துகொள். இன்னும் பல உன்னக்க வைத்திருக்கிறேன்.
பாசமுடன் நண்பன்,
பூபாலன்
http://naiyaandinaina.blogspot.in/2010/09/blog-post.html
I have mentioned my feelings...
Post a Comment