அந்த பொம்மை கொள்ளை அழகு
பார்த்து தீராத அழகு
மிக அதிக விலை குடுத்து
மிக ஆசைபட்டு
அந்த பொம்மையை வாங்கினென்...
மிக ஆசையாக
அதனுடன் விளையாடினேன்...
அந்த மாறா புன்னகையை வெல்ல விளையாடினேன்...
அந்த தீராத அழகை வெல்ல விளையாடினேன்...
விளையாடினேன்... விளையாடினேன்...
காலையில் எழுந்தவுடன் விளையாடினேன்...
வேலை நேரத்தில் விளையாடினேன்...
மாலை நேரத்தில் விளையாடினேன்...
இரவும் விளையாடினேன்...
கனவில் விளையாடினேன்...
விளையாடி.. விளையாடி வலுவிலந்தேன்..
திரும்ப திருப்ப விளையாடினேன்...
மெல்ல மெல்ல நான் காலத்தை மறந்து விளையாடினேன்...
எரியும் விளக்கின் தழலில்
என் கை பட்ட தருணம்
நான் விழித்து கொண்டென்...
அதை நான் என் தோழனுக்கு கொடுத்துவிட்டேன்...
மிக அதிக விலை குடுத்து
மிக ஆசைபட்டு
அந்த பொம்மையை வாங்கினான்...
அந்த பொம்மை கொள்ளை அழகு
பார்த்து தீராத அழகு
***************
No comments:
Post a Comment