**************************************************
உண்மையில் இன்னும் இதை என்னால் நம்ப முடியவில்லை. 1800 கோடி ரொக்கமாக ஒரு அரசு ஊழியர் வைத்திருக்கிறார் என்றால், தலை தான் சுற்றுகிறது.
1800 கோடி ரொக்கம், 1500 கிலோ தங்கம். அடேயயப்பா!!! இன்னும் அசையா சொத்து விபரங்கள் வெளி வந்தால் , ஒரு மாநில பட்ஜெட்யே போட்டுவிடலாம்... சபாஷ் !!!!!!!!!
திருடுபவர்களுக்கு இப்போதல்லாம் லட்சங்கள் மதிப்பிழந்து விட்டன. கோடிகள் தான். அதுவும் ஒரு சாதாரண இந்திய குடிமகன் கற்பனையும் செய்ய முடியாத தொகை.
ஆனால் இளிச்சவாய இந்திய மக்கள், உழைத்து சம்பாதிப்பது எல்லாம் ஆயிரங்களில் தான். மீறி போனால் லட்சம். நான் சொல்வது வருட சம்பளம்.
முன்பெல்லாம் இவ்வளவு லட்சம் லஞ்சமாக வாங்கினார். இவ்வளவு லட்சம் வைத்திருந்தார் என வரும். இப்பொழுதுதான் நாம் மிக வேக மாக வளர்ந்து வருகிறோமே!!! நல்ல முன்னேற்றம்
இதில் வேதனை என்னனா? அவருக்கு எவ்வளவு தைரியம்!!!!!! எந்த கவலையும் இல்லாம, டிவில் போஸ். !!!
என்ன ஆயிரும்??? 10 , 15 வருசத்திற்கு கேஸ இழு இழு னு இழுத்து , போதிய ஆதாரம் இல்லிபாங்க!!! அதுக்குள்ளே அவரும் ஜாமின்ல வெளிவந்து வாழ்கையை அனுபவிச்சுட்டு இயற்கையாவே மண்டைய போடுருவாரு. அவர் பேரன் தான் வந்து தீர்ப்பை வாங்கிக்கணும்.
நல்ல நாடு.. ரொம்ப பெருமையா இருக்கு...
இவரே இவ்வளவு வைத்திருக்கிறார் என்றால், ???
நான் என்ன சொல்லறேன்ன,,, இவர் வகிக்கும் பதவி, சில அரசு பதவிகளோடு ஒப்பிடும் போது, ஜுஜுபி !!! உதாரனத்திற்க்கு முதல்வர், மத்திய அமைச்சர் இப்படி பட்ட பதவிகள். நினைத்து பாருங்கள், ஒரு சாதாரண மருத்துவ கவுன்சில் தலைவர் 1800 கோடி ரொக்கமாக கையில் வைத்துருக்க முடியும் போது, இவர்கள் கணக்கு??? வேணாம் சாமி... கணக்கே இருக்காது....
சமீப காலமாக இவைகள் தான் நியூஸ்
1. நித்தியாந்த்த ஸ்வாமிகள் சொத்து 2000 கோடி
2. IPL ஊழல் 5000 கோடி
3. மருத்துவ கவுன்சில் தலைவர் 1800 கோடி
இதேல்லாம் லேட்டஸ்ட் நியூஸ். லல்லு வில் இருந்து கருணாநிதி, ஜெயலலிதா வரை கணக்கு போட்டால்?????
என்ன வேண்டுமானாலும் செய்யலாம் இங்கே... யாரும் கேட்க முடியாது... என்னெனில், கேட்கும் அதிகாரத்தில் இருபவர்கள் தான் முதல் திருடர்களாக இருப்பார்கள்.. அப்புறம்??
உண்மையை சொன்னால், நமக்கு இதெல்லாம் மிக பழகி விட்டது.. நாம் என்ன செய்ய முடியும்??? கோபமாக பதிவு எழுதலாம் அல்லது இதை படித்து விட்டு கொஞ்ச நேரம் இதை பற்றி பேசுவோம் அல்லது கொஞ்ச நேரம் ரத்தம் கொதிக்கும்!! கையாலாகத்தனம்!!!!
இந்தியாவில் இரண்டு வகையானவர்கள் தான் உள்ளார்கள். ஒன்று ஏமாற்ற தெரிந்தவர்கள்!!! , இன்னொன்று ஏமாற தெரிந்தவர்கள்!!! இதில் நாம் என்ன வகை என்று நான் சொல்ல தேவை இல்லை !!!
இதற்கெல்லாம் முடிவே இல்லையா? இரண்டு வழி இருக்கு
ஒன்னு , தண்டைனைகள் மிக கடுமையாக இருக்கணும்.
இல்லாவிட்டால் . தனி நபர் சர்வாதிகாரத்தின் கீழ் நாடு இருக்கணும். அந்த நபர் கொஞ்சமாவது நல்லவராக இருக்க வேண்டும்
இந்த இரேண்டில் எதுவேமே இங்கு நடக்க போவதில்லை!!!
மக்களும் இதை ஒன்றும் பெரிதாக எடுத்து கொள்ள மாட்டார்கள்!!!
ஏன்னென்றால் அவர்களே காசு வாங்கிட்டு ஒட்டு போட தயங்குவதில்லை!!
நல்லவர்களுக்கு நரகமாகவும், கெட்டவர்கள் வாழ வழிவகை செய்து கொடுத்து, அதை ஊக்க படுத்தும் சொர்க்கமாகவும் இருக்கும் இந்த நாட்டின் அரசை நான் வெறுக்கிறேன்
" நெஞ்சு பொறுக்குதில்லையே !! இந்த நேர்மையற்ற நாட்டை கண்டு!!!! "
14 comments:
இந்த பதிவு அருமை
எனது கோபம் பதிவு செய்யப்பட்டதாக உணர்கிறேன்
இந்திய ஒளிர்கிறது கனகு!!!
உங்கள் எழுத்து நடை நன்றாக உள்ளது
உங்கள் வருகைக்கு நன்றி நண்பர்களே!!!
அறுபதுகளில் நான் என்னுடைய கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது எங்கள் பள்ளியில் ஒரு Attender இருந்தார். அவர் திரு.நெ.து.சுந்தரவடிவேலு கல்வித்துறை இயக்குனர் அவர்களுடைய ஊர்க்காரர், உறவுக்காரர்.தன்னுடைய சொந்த ஊருக்கு மாற்றல் கேட்டு விண்ணப்பித்துவிட்டு தன்தந்தையுடன் சென்று இயக்குனரை சந்தித்து மாற்றலுக்கு உதவவேண்டியுள்ளனர். அவரோ உன்னுடைய விண்ணப்பம் உன்னுடைய turn வரும்போது CEOவால் பரிசீலிக்கப்படும். நான் இதில் தலையிடமாட்டேன் நீங்களும் என் உறவினர் என்று கூறிக்கொண்டு CEOவைப்பார்க்கக் கூடாது என்றி கூறி திருப்பி அனுப்பிவிட்டார். ஒரு சாதாரண Attender பணிக்கே இத்தனை நேர்மையாகச்செயல்பட்டனர். அப்போது காமராஜ் முதல்வர். அவர் பணத்துக்கும் காக்காய் பிடிப்பவர்களுக்கும் அடிபணியாதவர். இன்றைய முதல்வர் சர்க்காரியா கமிஷனால் விஞ்ஞான ரீதியாகக் கொள்ளையடிப்பவர் என்று சுட்டிக்காட்டப்பட்டவர். டில்லியில் போபர்ஸ் புகழ் சோனியா. அவர்கள் கீழ் பணிபுரிபவர்கள் எப்படி நேர்மையாக பணிபுரிவர்?
உங்கள் வேதனை புரிகிறது ஆனால் ஒன்றும் செய்யமுடியாது என்பதே நிதர்சனம்.
ஆத்தி, இங்கல்லாம் இத்தனக்கோடிங்க சும்மா வெச்சிருக்கறதால தான் நாமல்லாம் தெருக்கோடிய விட்டு தாண்டமாட்டேங்கறோம். தகவலுக்கும் பகிர்ந்தமைக்கும் நன்றி நன்பரே.
anbudan
ram
www.hayyram.blogspot.com
I hate our politicians who are real backbone for all these non-sense. I appreciate your work here.Nice write up.. keep going
//
Manickam said...
ஒரு சாதாரண Attender பணிக்கே இத்தனை நேர்மையாகச்செயல்பட்டனர். அப்போது காமராஜ் முதல்வர். அவர் பணத்துக்கும் காக்காய் பிடிப்பவர்களுக்கும் அடிபணியாதவர். இன்றைய முதல்வர் சர்க்காரியா கமிஷனால் விஞ்ஞான ரீதியாகக் கொள்ளையடிப்பவர் என்று சுட்டிக்காட்டப்பட்டவர். டில்லியில் போபர்ஸ் புகழ் சோனியா. அவர்கள் கீழ் பணிபுரிபவர்கள் எப்படி நேர்மையாக பணிபுரிவர்?//
Kanagu:
உண்மை!! பேய் ஆட்சி செய்தால், பிணம் தின்னும் சாத்திரங்கள் !!!!
அன்று இம்மாதிரி விஷயங்கள் மான கேடானவை !! இன்று இது ஒரு சாதாரண, அன்றாட நிகழ்வாகி விட்டது. எங்கே சென்று முடியுமோ?
உங்கள் வருகைக்கு நன்றி நண்பரே !!!
//வடுவூர் குமார் said...
உங்கள் வேதனை புரிகிறது ஆனால் ஒன்றும் செய்யமுடியாது என்பதே நிதர்சனம்.//
அந்த கையாலாகத்தனம் தான் கோபத்தை தருகிறது :-)
உங்கள் வருகைக்கு நன்றி நண்பரே !!!
//
hayyram said...
ஆத்தி, இங்கல்லாம் இத்தனக்கோடிங்க சும்மா வெச்சிருக்கறதால தான் நாமல்லாம் தெருக்கோடிய விட்டு தாண்டமாட்டேங்கறோம். தகவலுக்கும் பகிர்ந்தமைக்கும் நன்றி நன்பரே.
//
இது ஒரு surprise :-)
நான் விரும்பி படிக்கும் ப்ளொக்குகளில் உங்களுடைதும் ஒன்று ராம்.
உங்கள் வருகைக்கு மகிழ்ச்சி
Hi Rasu,
Again E.C. Definitely true. I have read one articles in www.dinamalar.com i.e "87.50 lakhs crore Indian money in swiss bank only. Suppose it will be return to india, then after 30 years free tax and govt. can deposit 2.5 lakhs for each indian." So calculate in other bank.
And also you have mentioned IPL ஊழல் 5000 கோடி. It is not true, total amount around 30,000 crore.
Only one idea youths take all charges (except PM, Defence Minister, Financial and President ) so that india will be win the world.
Thanks and Regards,
E.C
www.reckoncoders.com
//நான் விரும்பி படிக்கும் ப்ளொக்குகளில் உங்களுடைதும் ஒன்று ராம்.// தங்கள் ஆதரவிற்கு நன்றி கனகு.
anbudan
ram
www.hayyram.blogspot.com
Hi kanagu,
Blog wa snice and it reveals 100% anguishness from your heart... i too agree for your thoughts.
But in real world we- the citizens of India - are in a state to bribe a office boy so it is not so suprise that High commisioner is having just 1800 crores liquid cash in hand.
Why cant you replace Karuna or Sonia to make our country a bribe free and wealthy? I know you have that ability..
Thanks
Seelan
Thanks fror the comment seelan
india mattmalla, america ve nammpala nampithane iruku!!! unakku purinthathu obama ku puriyalaiye!!!! :-)
Post a Comment