Friday, February 19, 2010

வானம்

--------------------------------------------------------

வானம் எப்போதும் எனக்கு மிக பெரிய ஆச்சிரியத்தையும், ஒரு மாய மயக்கத்தையும் தருவது. அத்தனை பெரிய பிரமாண்டம், என்முன் இருக்கும் போது, ஏற்படுவது வியப்பு என்பதை விட , ஒரு வகை பயபக்தி தான்.

சற்றே நினைத்து பாருங்கள் !!! அதன் முன் மனிதன் வெறும் தூசு... நம்மை பார்த்து அது சிரிகிறது!!! அன்றாட இயந்திர வாழ்வில் முழ்கி, தன்னை இழந்தவர்களுக்கு, வானம் ஒரு உண்மையை கூறி கொண்டே இருக்கிறது

வானத்தை ஊன்றி பார்க்கும் போது , நான் ௬ணி குறுகி போகிறேன்.. கடவுளை எங்கும் தேட வேண்டாம். இதோ நம் கண் முன்னே பரந்து விரிந்து.

எவ்வளவு பெரிய பிரமாண்டம்!!!
நம் கற்பனைக்கும் எட்டாத பரப்பு!!!
நாம் செய்யும் அனைத்துக்கும் அது சாட்சியாக இருக்கிறது!!!
எல்லையே இல்லாத அந்த வெளியை மேலும் மேலும் உற்று நோக்க, நம்முள் ஏற்படும் உணர்வு மாற்றங்கள் , உரைக்க முடியாதவை


நமது பூமி, சூரியனை விட பரப்பில் மிக சிறியது!! அண்டத்தில் இருக்கும் மற்ற சூரியன்களோடு ஒப்பிடும்போது, நம் சூரியன் கடுகு.. இதில் மனிதனின் இருப்பை கற்பனை செய்து பாருங்கள்!!!

இத்தனையும் உள்ளடக்கி, இதோ நம் முன் காட்சி தருகிறது வானம்!!!

இந்த எல்லையற்ற வெளியை படைத்தது யார்? அதற்கு அப்பால் என்னதான் இருக்கும்?

இப்படி எண்ணி பார்க்கும் போது, ஏதோ ஒரு தருணத்தில் இதயத்தின் ஏதோ ஒரு மூலையில், ஏதோ ஒன்று உடைவது போன்ற உணர்வு.. கண்களில் நீர் !!!

அதை அறிவதற்கு எனக்கு தகுதி இல்லை!!!

வானம் நம் முன் விரிந்திருக்கும் விஸ்வருப கடவுள். அதை வணங்குகிறேன் !!!

Saturday, February 6, 2010

கடவுளை தேடி...

-----------------------------

எதிலும் சேரவில்லை
- தனித்தே எண்ணம்,

எங்கும் தனிமை இல்லை
- இணைந்தே பயணம்

உண்மையின் பிம்பம்
- உணர்வுகளுக்குள்ளே

உன்னை நான் உணர்வது
- நிகழ்வுகளாலே!!!