Thursday, December 23, 2010

கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட பெண்

!!!!!!!!!!! Mind blowing Performance !!!!!!!!!!!!

முதல் வீடியோ.. முதல் நிலை செலக்சனில் பாடும்போது. (நடுவர்களின் ரியாக்சன் எப்படினு பாருங்கள்!! )




இது இறுதி சுற்று. Real Mind-Blowing Performance !!!!!  உண்மையிலேயே மெய் சிலிர்த்து விட்டது





இங்கெயும் நடுவர்களின் ரியாக்சன் எப்படினு பாருங்கள்.. குறிப்பாக பாடகர் ஸ்ரீனிவாசின் உடல்மொழி.


இந்த சமுதாயத்தில் ஒரு பெண் குழந்தைக்கு எப்படிபட்ட ஆதரவு (support )அவள் அப்பாவிடம் இருந்து இருக்க வேண்டும் என்பதற்க்கு, இந்த  பெண்ணின் அப்பா ஒரு உதாரணம்.


பாட்டின் இனிமை மட்டும் அல்ல.. அந்த பெண்ணின் புன்னகையும், வெகுளிதனமும் கடவுளின் மற்ற வரங்கள்!!!!!

Sunday, November 7, 2010

பொன்னியின் செல்வன் - ஒரு பொக்கிஷம்

*********************************************************************
இன்னும் நீங்காத பிரமிப்புடன் இதை எழுதி கொண்டிருக்கிறேன்.

ஒரு புத்தகத்தை இப்படி என்னை மறந்து, காலம் பற்றி நினைவின்றி,
பித்து பிடித்தது போல் .. படித்தது இதுதான் முதல்முறை.

சோழர் குல தோன்றல்களையும்,சோழ வள நாட்டை பற்றியும் படித்தேன்என்பதை விட, 'பொன்னின் செல்வன்' என்ற கால எந்திரத்தின் மூலம் பயனித்து,,, அவர்களோடு வாழ்ந்தேன் என்று தான் கூற வேண்டும். இது ஒரு அற்புத அனுபவம்.


பல பேர் சொல்லியும், ஆங்காங்கே இப்புத்தகத்தை பற்றி படித்தும்.. வாங்கி படிக்க வேண்டும் என்று ரொம்ப நாட்க்களாக நினைத்து கொண்டிருந்தேன்.
போனமுறை ஈரோடு புத்தக கண்காட்சியில், மலிவு விலையில் வாங்கியும் ஆயிற்று.ஆனால் ஒரு தயக்கம் இருந்தது. இது 50 வருடங்களுக்கு முன்னால் எழுத பட்டது. எனவே அந்த மொழிநடை படிக்க கொஞ்சம் சவாலாக இருக்குமோ என்று.,

ம்ம்ஹும்...அதெல்லாம் முதல் அத்தியாயத்தை படிக்கும் முன்...

ஆடி பெருக்கு அன்று,
முன்மாலை பொழுது,
அடர்ந்த மரங்கள்
வீரநாராயண ஏரி நிரம்பி வழிய..
சோழ நாட்டு பெண்கள் பாட்டு பாடி அதை கொண்டாடி கொண்டிருக்க..

அங்கு வரும் வல்லத்து இளவரசன், வாணர் குல வீரன் வந்திய தேவனின் அறிமுகத்தோடு தொடங்குகிறது 'பொன்னியின் செல்வன்'.

ம்ம்ம்.. சீட் பெல்ட் போட்டு கொள்ளுங்கள். 1000 வருடங்கள் பின்னொக்கி பயனிப்போம்.

சோழர்களின் வீரத்தை
அவர்களின் உயந்த வாழ்கை நெறிமுறையை
அவர்களின் இராஜ்ஜியதை,
அவர்களின் திறமையை
அவர்களின் காதலை
எல்லாவற்றிக்கும் மேலாக 'அவர்களின் தியாக மணபான்மையை'

அவர்களோடு அவர்களாக பயணித்து தெரிந்து கொள்வோம்.

முதலில் 'பொன்னியின் செல்வன்' படைத்த ஆசிரியர் பற்றி கொஞ்சம்......

பொன்னியின் செல்வன் படித்தவுடன் எனக்கு தோன்றியது இதுதான்,,,
'இந்த மாதிரி ஒரு புத்தகத்தை எழுத சாதாரண அறிவு படைத்தவர்களால் முடியாது. ஏன் அறிவில் மேன்பட்டவர்கள் கூட எழுதிவிட முடியாது.. இதை எழுத கூரிய அறிவுடன், தெய்வ அனுகிரகமும் வேண்டும். அது இதை எழுதிய திரு.கல்கி அவர்களுக்கு வாய்த்திருகிறது.'

ஒரு நான்கு நாட்கள், சோழர்களொடு சோழர்களாக வாழ்ந்த அனுபவத்தை தந்த திரு.கல்கி அவர்களுக்கு .. பல கோடி நன்றிகள்..

பொன்னியின் செல்வன்...

எத்தனை கதை மாந்தர்கள்.... ஏத்தனை சம்பவங்கள்....

இதன் வெற்றியே.. கதை மாந்தர்களை வடிவமைத்ததில் தான் இருக்கிறது.

படிப்பது பெண்ணாக இருந்தால் .. அவர்கள் பொன்னியின் செல்வன் மீதோ.. வாணர் குல வீரன் வந்திய தேவன் மீதோ காதல் கொள்வார்கள்.


படிப்பது ஆணாக இருந்தால்.. சோழர் குலவிளக்கு, குந்தவை பிராட்டியை தேடி அலைவார்கள்....



ஆற்றல் படைத்த ஓற்றன், வீர வைஷணவன் ஆழ்வார்கடியான்,
பாண்டிய நாட்டு ஆபத்துதவிகள்.
தளபதி பழுவேட்டையர்கள்,
வீரர்கள் கந்தன்மாறன், சம்புவரையர்கள்,மலையமான்
தைரிய பூங்குழலி.....
பூவினும் மெல்லிய வானதி
அழகிய விஷம் நந்தினி,...
அன்பின் அன்னை 'ஊமை தாய்'
கதை நாயகன் வாணர் குல வீரன் வந்திய தேவன்
கம்பீர அழகும் அறிவும் கொண்ட இளைய பிராட்டி குந்தவைதேவி
எல்லாருக்கும் மேல்- பொன்னின் செல்வர் - அருள்மொழி வர்மர்...

இன்னும் எத்தனை....

நிறைய உப நதிகள் வந்து கலந்தாலும், பொன்னியின் செல்வனின் மைய ஓட்டம் சோழ இராஜ்ஜியத்தை பற்றியது.
ஒரு இராஜ்ஜியதை ஏற்படுத்த, அதை கட்டி காக்க... எண்ண எண்ண.. செய்ய வேண்டி இருக்கிறது !!!!
இக்கதையில் யாருமே தீயவர்கள் கிடையாது. இங்கு சூழ்நிலைகள் தான் தீயது. ஒரு குழப்ப சூழ்நிலையில் அல்லது மோசமான சூழ்நிலையில்
ஒரு ராஜ்ஜியத்தை காக்க நடக்கும் போராட்டமே பொன்னியின் செல்வன்.

கதை முழுக்க அன்பே பிரதானம். தாய்பாசம், தந்தைபாசம், சகோதர பாசம்,காதல், நட்பு, விசுவாசம்,வீரம், குடிமக்கள் பாசம்...  என அன்பால் பின்னபட்ட ராஜராஜ சோழனின், சோழ சாம்ராஜ்ஜிய கதையே 'பொன்னியின் செல்வன்...'

கதையில் வரும் வர்ணனைகள், சோழ பேரரசு இன்று இல்லையே.. சோழர் குல தோன்றல்கள் நம்மோடு வாழவில்லையே!!! என ஏக்கம் கொள்ள வைக்கும்...

இதை படித்தவுடன், ஒரு பெருமித உணர்வு பொங்கி வழிந்தது... ஆம் 1000 வருடங்களுக்கு முன் சோழர்கள் ஓர் உயர்தர வாழ்கை முறை வாழ்ந்து இருக்கிறார்கள். அவர்களின் நேர்மை, பண்பு வியக்க வைக்கிறது.

பொன்னியின் செல்வன் கதை முடிவு பற்றி ஒரு சலசலப்பு உண்டு.. ஆனால் அதற்கு ஆசிரியர் தரும் விளக்கம் ஆக சிறப்பானது.

(எனது கண்ணிப்பின் படி வந்தியத்தேவன், குந்தவை பிராட்டியின் காதலை ஆசிரியர் எடுத்துரைத்த விதமே.. வாசகர்களை வேறு ஒரு முடிவை நோக்கி எதிர்பாக்க வைத்திருக்கும்... ஏனென்றால்.. அந்த காதலை அவ்வளவு வீர்யமாக ஆசிரியர் வடிவமைத்திருப்பார். )

குந்தவை- வந்திய தேவன் காதல்
பூங்குழலியின் தைரியம், காதல்
நந்தினியின் வசிகரிப்பு...
வந்திய தேவனின் சாகஸங்கள்..
ஆழ்வார்கடியானின் ஓற்று அறியும் திறமை..
வந்திய தேவன் - ஆருள்மொழி வர்மர் நட்பு....
பொன்னியின் செல்வரின் ஓளி...

இப்படி எத்தனயோ கவர்ந்த விஷயங்கள் இருந்த போதிலும்... என்னை மிக பாதித்த, கவர்ந்த பாத்திர படைப்பு,, - ஊமை தாய்.. அந்த அளவுகடந்த, அபரிதமான, பொங்கி வழியும் அன்பு.., நம்மை உளவியல் ரீதியாக மாற்ற வல்லது....

ஆனால் இப்புத்தகதை படிக்க சொல்லி பரிந்துரைக்க போவதில்லை..(உங்களில் பலர் முன்பே படித்திருக்களாம்.. ( நான் எப்பவுமே கொஞ்சம் லேட்...) )

ஆனால் ஒன்று மட்டும் உறுதியாக சொல்ல முடியும்... இதை படிக்காமல் போனால்.. வாழ்வின் ஓர் சந்தொசத்தை, ஓர் அற்புத அனுபவத்தை இழக்கீறீர்கள் என்று அர்த்தம்.

முன்பே படித்த வாசகர்கள், தங்கள் வாசிப்பனுபவத்தை பிண்ணூட்டத்தில் பகிரலாம்..

Saturday, September 11, 2010

திருடி அகபட்டவனின் முகம்

ரோட்டில் நடந்து சென்று கொண்டு இருந்தேன். திடீரென ஒரு சலசலப்பு. கூட்டம். கூட்டத்தின் நடுவே அவன்.


நிறைய அறை விழுத்திருக்க வேண்டும்.
முகம் முழுக்க தடிப்புகள்.
கண்ணில் நீர். நிறைய அழுதிருந்தான். அழுது கொண்டிருந்தான்.
மாண்டி கொண்ட பதட்டம்.
எல்லாவற்றையும் தாண்டி இனி என்ன ஆகுமோ என்ற மரண பயம் அவன் முகத்தில் தெரித்தது.

எனக்கு அவனுடைய முகத்தை பார்த்த போது ஒரு சிறிய நடுக்கம்தான் ஏற்பட்டது. அகத்தின் அழகு முகத்தில் என்பார்.அழகு மட்டுமல்ல. அகத்தின் அவலமும் முகத்தில்தான்.

பிக்பாக்கெட் ஆக இருக்க வேண்டும். தவறு அவன் பக்கம்தான். திருடன். தண்டனைக்கு உரியவன்.

ஆனாலும் அவன் முகத்தில் தெரிந்த அந்த மரன பயம், அவன் மேல் பரிவை தந்தது.

ஒரு திருடன் மேல் என்ன பரிவு எங்கிறீர்களா?

அவனுக்கு மீறி போனால், 16 அல்லது 17 வயது தான் இருக்கும்.அவன் உடலில் வாங்கிய வலி நாளை மறைந்து விடும்.
ஆனால் அகம் கண்டிப்பாக கடுமையாக காயம் பட்டிருக்கும்.

அவனை அடிப்பதில்தான் அவர்களுக்கு என்னே சுகம்... கிடைத்து விட்டான் ஒருவன் நம் வீரத்தை காட்ட,,,,

ஒரு நாய் இதைவிட நல்ல மரியாதையை பெறும்.

நான் அவன் செய்ததை நியாய படுத்தவில்லை. ஆனால் அவன் அழுகை நிஜம். அதற்க்கு பின்னால் என்ன கதையோ?

Tuesday, September 7, 2010

படித்த ஒரு சிறந்த கவிதை - ஜெயமோகனின் பகடி

படித்த ஒரு சிறந்த கவிதை...

--------------------------------------------

சிறகடித்து ஒரு வானநீலப்
பறவை மஞ்சள்
சிறகுகள் உதிர் இறகு
காற்றில்
பறக்க
எடுத்திருந்தால்
என் ஆனந்தக் காது.
நமைச்சல்
எப்போது
அடுத்த பறவை?


கவிதை எப்படி?

விளக்கத்திற்க்கு -- http://www.jeyamohan.in/?p=311

எழுத்தாளர் ஜெயமோகனின் வலைதளத்தில் சமீபத்தில் படித்த பதிவு இது. படித்து அனுபவித்து , ரொம்ப நேரம் சிரித்தேன்.

Saturday, August 28, 2010

எந்திரன் இசை - Read Only Access

---------------------------------------------------------------------------------

இதுதான் உங்க 'ட்க்'கானு கேட்கறது காதில விழுது. :-)


என்ன செய்ய? ஒரு இசை நமக்கு பிடிக்குமா? பிடிக்காதா? என்று தெரியவே இவ்வளவு நாள் தேவைபடுகிறது.இது சைகாலஜிகல் துறை சம்பந்தபட்டவர்கள் இதை ஆராயலாம்.

முதன் முறை கேட்கும் போது எந்த பாடலுக்கும் வித்தியாசம் தெரியாமல், ஒரு உயிரே இல்லாமல் இருந்தது அல்லது 'இருந்தது போல்' இருந்தது. ( இந்த வாக்கியம் சரியா? ;-))  ஆனால், அதை எழுத பயம்.. ஏனென்றால் பல தடவை நான் இப்படி ஏமாந்திருக்கிறேன்.

A.R. ரஹ்மான் இசையை கேட்க கேட்க அது தரும் அனுபவம் முற்றிலும் வேறானது. பின்ன... முதலில் கேட்கும் போது கேட்க பிடிக்காதது, பிறகு மிக பிடித்த பாடல் வரிசையில் சேர்ந்து விடுகிறது.

பதிவுலகில்,எந்திரன் இசை விமர்சனங்களை படிக்கும் போது இது தெளிவாக தெரியும்.யாருமே 100% சூப்பர் என எழுதுவதில்லை..

எந்திரனில் எனக்கு பிடித்தது ( இப்போதைக்கு :-) ) -

1. இரும்பிலே ஓர் இருதயம்... ( அந்த 'காந்த' பெண் குரல்- Amazing!!!!! )

2. கிளிமாஞ்சாரோ...

பி.கு:

ஆனால் ஒன்று தெளிவு. இதில் எந்த பாடலையும் யாரும் பாடி இன்புற இயலாது. கேட்க மட்டுமே முடியும். கனிப்பொறி மொழியில் சொன்னால் - Read only. No Write Access :-)

Saturday, April 24, 2010

நெஞ்சு பொறுக்குதில்லையே !!

**************************************************

உண்மையில் இன்னும் இதை என்னால் நம்ப முடியவில்லை. 1800 கோடி ரொக்கமாக ஒரு அரசு ஊழியர் வைத்திருக்கிறார் என்றால், தலை தான் சுற்றுகிறது.

1800 கோடி ரொக்கம், 1500 கிலோ தங்கம். அடேயயப்பா!!! இன்னும் அசையா சொத்து விபரங்கள் வெளி வந்தால் , ஒரு மாநில பட்ஜெட்யே போட்டுவிடலாம்... சபாஷ் !!!!!!!!!

திருடுபவர்களுக்கு இப்போதல்லாம் லட்சங்கள் மதிப்பிழந்து விட்டன. கோடிகள் தான். அதுவும் ஒரு சாதாரண இந்திய குடிமகன் கற்பனையும் செய்ய முடியாத தொகை.

ஆனால் இளிச்சவாய இந்திய மக்கள், உழைத்து சம்பாதிப்பது எல்லாம் ஆயிரங்களில் தான். மீறி போனால் லட்சம். நான் சொல்வது வருட சம்பளம்.


முன்பெல்லாம் இவ்வளவு லட்சம் லஞ்சமாக வாங்கினார். இவ்வளவு லட்சம் வைத்திருந்தார் என வரும். இப்பொழுதுதான் நாம் மிக வேக மாக வளர்ந்து வருகிறோமே!!! நல்ல முன்னேற்றம்

இதில் வேதனை என்னனா? அவருக்கு எவ்வளவு தைரியம்!!!!!! எந்த கவலையும் இல்லாம, டிவில் போஸ். !!!


என்ன ஆயிரும்??? 10 , 15 வருசத்திற்கு கேஸ இழு இழு னு இழுத்து , போதிய ஆதாரம் இல்லிபாங்க!!! அதுக்குள்ளே அவரும் ஜாமின்ல வெளிவந்து வாழ்கையை அனுபவிச்சுட்டு இயற்கையாவே மண்டைய போடுருவாரு. அவர் பேரன் தான் வந்து தீர்ப்பை வாங்கிக்கணும்.


நல்ல நாடு.. ரொம்ப பெருமையா இருக்கு...


இவரே இவ்வளவு வைத்திருக்கிறார் என்றால், ???

நான் என்ன சொல்லறேன்ன,,, இவர் வகிக்கும் பதவி, சில அரசு பதவிகளோடு ஒப்பிடும் போது, ஜுஜுபி !!! உதாரனத்திற்க்கு முதல்வர், மத்திய அமைச்சர் இப்படி பட்ட பதவிகள். நினைத்து பாருங்கள், ஒரு சாதாரண மருத்துவ கவுன்சில் தலைவர் 1800 கோடி ரொக்கமாக கையில் வைத்துருக்க முடியும் போது, இவர்கள் கணக்கு??? வேணாம் சாமி... கணக்கே இருக்காது....


சமீப  காலமாக இவைகள் தான் நியூஸ்

1. நித்தியாந்த்த ஸ்வாமிகள் சொத்து 2000 கோடி

2. IPL ஊழல் 5000 கோடி

3. மருத்துவ கவுன்சில் தலைவர் 1800 கோடி

இதேல்லாம் லேட்டஸ்ட் நியூஸ். லல்லு வில் இருந்து கருணாநிதி, ஜெயலலிதா வரை கணக்கு போட்டால்?????


என்ன வேண்டுமானாலும் செய்யலாம் இங்கே... யாரும் கேட்க முடியாது... என்னெனில், கேட்கும் அதிகாரத்தில் இருபவர்கள் தான் முதல் திருடர்களாக இருப்பார்கள்.. அப்புறம்??

உண்மையை சொன்னால், நமக்கு இதெல்லாம் மிக பழகி விட்டது.. நாம் என்ன செய்ய முடியும்??? கோபமாக பதிவு எழுதலாம் அல்லது இதை படித்து விட்டு கொஞ்ச நேரம் இதை பற்றி பேசுவோம் அல்லது கொஞ்ச நேரம் ரத்தம் கொதிக்கும்!! கையாலாகத்தனம்!!!!


இந்தியாவில் இரண்டு வகையானவர்கள் தான் உள்ளார்கள். ஒன்று ஏமாற்ற தெரிந்தவர்கள்!!! , இன்னொன்று ஏமாற தெரிந்தவர்கள்!!! இதில் நாம் என்ன வகை என்று நான் சொல்ல தேவை இல்லை !!!
இதற்கெல்லாம் முடிவே இல்லையா? இரண்டு வழி இருக்கு


ஒன்னு , தண்டைனைகள் மிக கடுமையாக இருக்கணும்.

இல்லாவிட்டால் . தனி நபர் சர்வாதிகாரத்தின் கீழ் நாடு இருக்கணும். அந்த நபர் கொஞ்சமாவது நல்லவராக இருக்க வேண்டும்


இந்த இரேண்டில் எதுவேமே இங்கு நடக்க போவதில்லை!!!

மக்களும் இதை ஒன்றும் பெரிதாக எடுத்து கொள்ள மாட்டார்கள்!!!
ஏன்னென்றால் அவர்களே காசு வாங்கிட்டு ஒட்டு போட தயங்குவதில்லை!!

நல்லவர்களுக்கு நரகமாகவும், கெட்டவர்கள் வாழ வழிவகை செய்து கொடுத்து, அதை ஊக்க படுத்தும் சொர்க்கமாகவும் இருக்கும் இந்த நாட்டின் அரசை நான் வெறுக்கிறேன்


" நெஞ்சு பொறுக்குதில்லையே !! இந்த நேர்மையற்ற நாட்டை கண்டு!!!! "

Thursday, April 1, 2010

"கார்பன் கமால்" பதிவு

**************************************************************
ஏனென்று எனக்கு தெரியவில்லை, இந்த முறை IPL ஐ வெறி கொண்டு பார்த்து கொண்டு இருக்கிறேன். சென்ற வருடமோ , முதல் வருடமோ இவ்வளவு ஆர்வம் இருந்ததாக தெரியவில்லை. ஒருவேளை அப்போது ஏதாவது உருபடியான வேலை இருந்துருக்கலாம்.

இதுவும் ஒருவகை போதைதான். நம்மை அறியாமல் பொழுது போகிறது.

இந்த IPL ல என்ன சுவாரசியம்னா, முன்பெல்லாம் நல்ல கேட்ச் பிடித்தால் , குட் கேட்ச் , unbelivable கேட்ச் அப்பிடின்னு கமெண்ட்ரி பண்ணுவாங்க.

இந்த முறை "கார்பன் கமால்" கேட்ச் அப்ப்டிகிறாரு ரவி சாஸ்திரி......
கார்பன் கமால்" கேட்ச்சா??? அப்பிடீனா???

எனக்கு ஒன்னும் புரியல்லை. "சூப்பர் அல்லது குட்" கு synonym அ இருக்கலாம்னு நினைச்சுட்டேன்.

நல்ல வேளை, ஆபீஸ் ல போய் சக ஊழியரை பாராட்டும் போது "கார்பன் கமால்" work ன்னு சொல்லலை. மானம் போயிருக்கும்.

நீங்களே பாருங்க

சிக்ஸ் அடிச்சா - அது DLF maximam

நல்ல கேட்ச் பிடிச்ச - அது கார்பன் கமால் கேட்ச்

விக்கெட் விழுந்த - அது சிட்டி மொமென்ட் of success


அட ஆபீசர்களா!!! உங்க விளம்பர அறிவிற்கு அளவே இல்லையா....

போக போக பாருங்க !! சச்சின் going for lux ... noooo its going to be finolax அப்படிகற ரேஞ்சுக்கு போக போகுது.

(( lux = one ரன்

finolux l = two ரன் )))


நம்ம மண்டைய பிச்சுடு இருக்கனும்.

நல்ல பொழப்பு.. follow பண்ணுக!! விளங்கிடும்....

Friday, March 5, 2010

நித்தியானந்தர் - கதவை திறந்தவர்

-------------------------------------------------------------------------------


இங்கு அனைவருக்கும், ஏதாவது பிரச்சனை இருக்கிறது. அதை எப்பிடியாவது தீர்க்க வேண்டும்.
யார் எதை சொல்வார்கள், எதை தின்றால் பித்தம் தெளியும். இப்படி அலைபவர்கள்தான் நித்தியானந்தன் போன்றவர்களின் குறி.

இங்கு பிரச்சனையே!!! கடவுளை நம்மால் எளிதாக வரையுறுத்து விடமுடியாது. என்பதுதான்.

" தடி எடுத்தவன் தண்டல் காரன்" என்பது எங்கு பொருந்துகிறதோ இல்லையே, ஆன்மிகத்தில் கச்சிதமாக பொருந்தும்.சற்று வார்த்தை ஜால திறமையும், நல்ல நூலரிவும் போதும். கடவுளையும், கடவுள் சார்ந்த விஷயங்களுக்கும் வைத்து ஏமாற்ற.
எதை வேண்டுமானாலும் சொல்லலாம், ஏன் என்று கேட்க ஆள் இல்லை.

கடவுளை உணர்வதும், அந்த உணர்வை, அந்த அனுபவத்தை எழுதுவதும் தவறேதும் இல்லை. அவர்கள் செய்வது தத்துவ விசாரணை அல்லது பக்தி நூல் என்ற அளவில் பார்க்க படும்.

ஆதி சங்கரர் முதல் ரமண மகரிஷி வரை, இந்து சமயம் தந்த அத்துணை மகான்களும், தம்மை கடவுள் என்று சொல்லி கொண்டதில்லை.

ஆனால் நான்தான் கடவுள் என்பவர்களை எதை கொண்டு வேணாலும் அடிக்கலாம்.

"இவர்களுக்கு பின்னால் செல்பவர்கள் ஒன்று கேவலமான காரியவாதியாக இருப்பார்கள் இல்லை முட்டாளாக இருப்பார்கள்."

ஏ அப்பா!!!! எத்தனை பேர்... அவர் புகழ்பாடிகள்

குமுதம்... எழுத்தாளர் சாரு.. விஜய் டிவி ... யாருக்கும் துளியும் வெட்கம் இல்லை!!! இவ்வளவு நடந்த பின்பும் தன் வாசகர்களிடம் ஒரு சம்பிரதாய மன்னிப்பு கூட இல்லை...

எழுத்தாளர் சாரு, எவ்வளவு எழுதினார்? அப்பப்பப்பா!!!! இதிகாசம், புராணங்களை மிஞ்சி விட்டது.

கடவுளை கண்டாராம்.. எவ்வளவு பொய்!!! பினநவீனத்துவம் என்றால் இதுதான் போலிருக்கிறது.

நித்தியானந்தர் செய்தது பாவம் என்றால், அதில் இவர்களுக்கும் பங்கு வரும்.

தான் ஒரு கடவுள் என்பதை, எந்த கடவுள் இப்படி விளம்பரம் செய்து கொள்வார்.

சாரு எழுதுகிறார்.. நித்தியானந்தர் எங்கோ பெங்களூரில் இருந்து கொண்டு, சென்னையில் ஒரு நோயாளியின் உடம்பில் புகுந்து, அவருடைய தீர்க்க முடியாத நோயை குணப்படுத்தின்னாராம்.. ஏன் camera வைத்தது தெய்ரியவிலையோ !!! அத்தனையும் ஏமாற்று வேலை....

இப்போது ஏதேதோ சால்ஜாப்புகள்...


சாரு உங்களுக்கு ஒரு கேள்வி: இதையே வேறு யாராவது செய்திருந்தால் நீங்கள் என்ன சொல்லிருப்ப்ர்கள்?

என்னை கேட்டால் உடற்பயிற்சி செய்வது உண்மையாகலாம். இந்த யோகா ... தியானம் ... இதெல்லாம் ஊரை ஏமாற்றும் வேலை.

நல்ல அமைதியான தூக்கம். ... தனிமையில் நல்ல இசை .. இது போதும் எந்த stress யும் குறைக்க... சிவா ராத்திரி speacial கோர்ஸ் ஆம்... எவ்வளவு ஏமாற்று வேலை.


கடவுளை கண்கள் கொண்டு தேடுவது, நாம் படித்த, பார்த்த கதைவடிவகளின் எச்சம்...


கடவுளை உருவமாக மட்டும் தேடாதீர்... அவர் நிகழ்வுகளில் இருக்கிறார்.


சாமியார்கள் கடவுளின் நேரடி agent கள் அல்ல.....
நம் கடவுளிடம், நாம் நேரடியாக பேசுவோம்... இடைதரகர் எதற்கு?


நித்தியானந்தர் மீது கோப பட எதுவும் இல்லை. அவர் காலில் விழுந்து கிடந்தவர்களை கண்டு பரிதாப படலாம்!!!

Friday, February 19, 2010

வானம்

--------------------------------------------------------

வானம் எப்போதும் எனக்கு மிக பெரிய ஆச்சிரியத்தையும், ஒரு மாய மயக்கத்தையும் தருவது. அத்தனை பெரிய பிரமாண்டம், என்முன் இருக்கும் போது, ஏற்படுவது வியப்பு என்பதை விட , ஒரு வகை பயபக்தி தான்.

சற்றே நினைத்து பாருங்கள் !!! அதன் முன் மனிதன் வெறும் தூசு... நம்மை பார்த்து அது சிரிகிறது!!! அன்றாட இயந்திர வாழ்வில் முழ்கி, தன்னை இழந்தவர்களுக்கு, வானம் ஒரு உண்மையை கூறி கொண்டே இருக்கிறது

வானத்தை ஊன்றி பார்க்கும் போது , நான் ௬ணி குறுகி போகிறேன்.. கடவுளை எங்கும் தேட வேண்டாம். இதோ நம் கண் முன்னே பரந்து விரிந்து.

எவ்வளவு பெரிய பிரமாண்டம்!!!
நம் கற்பனைக்கும் எட்டாத பரப்பு!!!
நாம் செய்யும் அனைத்துக்கும் அது சாட்சியாக இருக்கிறது!!!
எல்லையே இல்லாத அந்த வெளியை மேலும் மேலும் உற்று நோக்க, நம்முள் ஏற்படும் உணர்வு மாற்றங்கள் , உரைக்க முடியாதவை


நமது பூமி, சூரியனை விட பரப்பில் மிக சிறியது!! அண்டத்தில் இருக்கும் மற்ற சூரியன்களோடு ஒப்பிடும்போது, நம் சூரியன் கடுகு.. இதில் மனிதனின் இருப்பை கற்பனை செய்து பாருங்கள்!!!

இத்தனையும் உள்ளடக்கி, இதோ நம் முன் காட்சி தருகிறது வானம்!!!

இந்த எல்லையற்ற வெளியை படைத்தது யார்? அதற்கு அப்பால் என்னதான் இருக்கும்?

இப்படி எண்ணி பார்க்கும் போது, ஏதோ ஒரு தருணத்தில் இதயத்தின் ஏதோ ஒரு மூலையில், ஏதோ ஒன்று உடைவது போன்ற உணர்வு.. கண்களில் நீர் !!!

அதை அறிவதற்கு எனக்கு தகுதி இல்லை!!!

வானம் நம் முன் விரிந்திருக்கும் விஸ்வருப கடவுள். அதை வணங்குகிறேன் !!!

Saturday, February 6, 2010

கடவுளை தேடி...

-----------------------------

எதிலும் சேரவில்லை
- தனித்தே எண்ணம்,

எங்கும் தனிமை இல்லை
- இணைந்தே பயணம்

உண்மையின் பிம்பம்
- உணர்வுகளுக்குள்ளே

உன்னை நான் உணர்வது
- நிகழ்வுகளாலே!!!