Sunday, December 20, 2009

ஏழாவது அறிவு

இந்த கட்டுரை திரு. இறைஅன்பு I .A .S அவர்களின் ஏழாவது அறிவு என்ற புத்தகத்தின் முதல் கட்டுரை. எனக்கு மிகவும் பிடித்த எழுத்து நடை திரு. இறைஅன்பு அவர்களுடையது. அவருடைய எழுத்துகளை படிக்கும் பொது அதில் உள்ள உண்மைதன்மையும் , எளிமையும் என்னை மிக கவர்ந்த விஷயம். மிக முக்கியமாக அவரது நகைசுவை.

"ஏழாவது அறிவு-பாகம் 2 " ல் பல கட்டுரைகளை படிக்கும் பொது, அவர் நம் உள்மனதுடன் பேசுவது போல இருக்கும். அவருடைய அனைத்து கட்டுரைகளின் சாரம், ஒரு தனி மனித குணாதிசயங்கள்.

"ஏழாவது அறிவு" என்ற கட்டுரை, மனிதனின் உள்மன குரல் (innar voice) பற்றியது. அந்த கட்டுரையில் அவர்
" எந்த விதமான வலிமையான பழைய மனபதிவுகளும் இல்லாமல், சலனமற்ற அலைகளற்ற கடலாக நாம் காத்திருந்தால், நம் உள்ளுணர்வு கூறும் மெல்லிய ஓசைகள் துல்லியமாக ஒலிக்கும்." .
"உள்ளே உள்ள குரலை கேட்க முடிந்தவர்கள் தூய்மையானவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் யாருக்காகவும் தங்களை மாற்றி கொள்ளாமல் தங்களுடைய உள்ளுணர்வுகாக தங்களையே பட்டை தீட்டி கொள்கிறார்கள். உள்ளே உள்ள குரல் முன் கூட்டியே சில நிகழ்வுகளை நமக்கு தெரியப்படுத்தும். கடைசி நேரத்தில் சில செயல்களை நாம் மாற்றி அமைப்போம். திடீரென்று பயணம் போக வேண்டாம் என்று தோன்றும். பின்னர் வீட்டில் இருந்தது நல்லது என்று தெரியும்."
என்கிறார்

கண்டிப்பாக இந்த உள்மன குரலை வாழ்வில் ஒரு முறையேனும் இதை நாம் அனுபவித்து இருப்போம். நமக்கே வியப்பாக இருக்கும். ஆனால் அந்த குரல் வலிமையானது.

இது எல்லா சமயங்களிலும் ஒலிப்பதில்லையே? ஏன்? அதற்கு நம் மனது தெளிந்த நீரோடையாக இருக்க வேண்டும்.

" உள்ளுக்குள் இருக்கும் குரலை கேட்க நாம் முதலில் சாந்தமடைய வேண்டும். நம் மனம் எண்ணங்கள் அற்று அமைதியடைய வேண்டும். பகுத்தறிவை தாண்டிய உணர்வு அது. அதை மூளையை கொண்டு திறக்க முடியாது. அங்கு இதயத்தினால் மட்டுமே நுழைய முடியும்" என்கிறார் இறையன்பு.

இது போன்ற பல அற்புதமான கருத்துகளை, மிக எளிமையுடனும், குட்டி கதைகளாலும், நகைச்சுவை ததும்ப சொல்லி இருக்கிறார் திரு. இறையன்பு.

வாய்ப்பு கிடைத்தால் " ஏழாவது அறிவு" புத்தகத்தை கண்டிப்பாக வாசித்து பாருங்கள்.

நன்றி பொறுமையுடன் வாசித்ததற்கு..

உங்கள் கருத்துகளை கீழே பதிவு செய்யலாம்.

Friday, December 4, 2009

இசை - இவ்வளவு தானா?

இது என்னோட முதல் பதிவு. ஒரு நல்ல விஷயமா அரம்பிக்கலாம்மேனு கடந்த ஒரு மாசமா வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.

எழுதி பெயர் வாங்கும் புலவர் இருகிறார்கள். குற்றம் கண்டு பிடித்தே பெயர் வாங்கும் புலவர்களும் இருகிறார்கள். . இதில் நாம் இரண்டாம் வகை.
(ஓகே.ஓகே. என்னடா இழுவை .. சொல்ல வந்தத சொல்லுடுட.. வேலை இருகுது இல்ல.. )

நம்ம ஊரு மியூசிக் directors பத்தி உங்களுக்கு ரொம்ப உயர் வாண எண்ணம் இருந்துசின நீங்களும் என்ன மாதிரி ஏப்ரல் fool அப்படிகிறதுதான் இந்த பதிவோட கருத்து.

இதை பாருங்கள்.
http://www.youtube.com/watch?v=IIuZpeegoIY&feature=related

உங்கே கருத்துகளை சொல்லுகே .